சென்னையில் எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்து SDPI போராட்டம்!

‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில், தனது வழக்கமான அநாகரிக போக்கை கையாண்டுள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய இறைத்தூதர் முகமது நபி (ஸல்) பற்றியும் தேவையில்லாமல் பேசி, அந்த விவகாரத்தை சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதை SDPI கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.

இந்நிலையில், நாவடக்கமின்றி போகிறபோக்கில் சிறுபான்மை மக்களை சீண்டி, தொடர்ந்து அநாகரிக போக்கை கையாளும் எச்.ராஜாவை கண்டித்து, சென்னை மாவட்ட அட்சியர் அலுவலகம் அருகே SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசும், காவல்துறையும் எச்.ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதோடு, எச்.ராஜாவின் உருவ பொம்பையையும் எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்

Close