சென்னை புத்தக திருவிழாவில் அதிரை பெண் எழுத்தாளர் மல்லிகா பாரூக் எழுதிய புத்தகம் வெளியீடு!

அதிரை நெசவுத்தெருவை சேர்ந்தவர் மல்லிகா பாரூக். முத்துப்பேட்டையில் திருமணம் செய்துள்ளார். கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர் தனது வலைப்பூவில் ஆக்கங்களை வெளியிட்டு வருகிறார். சர்வதேச அளவில் நடைபெற்ற கவிதை போட்டியில் முதலிடம் பிடித்த இவருக்கு கவியருவி என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. உணர்வுகளின் ஓசை, பூக்கவா புதையவா என இரண்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ள இவர் மூன்றாவதாக “ஒட்டாத உறவுப்பாலங்கள்” என்ற பெயரில் புத்தகத்தை எழுதியுள்ளார்.

இதன் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னை 41 வது புத்தக திருவிழாவில் மணிமேகலை பதிப்பகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இதில் திரைப்பட நடிகரும், பேச்சாளருமான சிவக்குமார், திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், முதல் தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு மல்லிகாவின் புத்தகத்தை வெளியிட்டனர்.

சகோதரி மல்லிகா தொடர்ந்து பல்வேறு புத்தகங்களை, ஆக்கங்களை வெளியிட்டு சமுதாயத்துக்கு பயனுள்ள வகையில் தனது எழுத்துப்பணியை தொடர அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

Close