அதிரையில் களைகட்டும் மாட்டுப்பொங்கல் – கூட்ட நெரிசலில் மீன் மார்க்கெட் (படங்கள் இணைப்பு)

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று முடிவடைந்ததை அடுத்து இன்று மாட்டுப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிரை விழா கோலம் பூண்டுள்ளது. அதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டனர். மார்க்கெட்டில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மீன்கள் சில மணி நேரங்களில் விற்றுத்தீர்ந்தன. குறிப்பாக வாளை மீன்களை ஏராளமான மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். அதே போல் இறால், நண்டு போன்றவைகளும் அதிகளவில் விற்கப்பட்டன. இதனால் மீன் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். மார்க்கெட்டில் ஒரே நேரத்தில் மக்கள் கூட்டம் திரண்டதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இரு சக்கர வாகனங்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு பார்க்கிங் செய்ய அனுமதிகப்பட்டன.

Close