Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை ஹாஜா நகர் இளைஞர்களின் பாராட்டிற்குறிய செயல் (படங்கள் இணைப்பு)

கடந்த 08/01/2018 அன்று அதிராம்பட்டினம் ஹாஜா நகரில் யா ஹாஜா இஸ்லாமிய இளைஞர் நற்பனி மன்றம் புதிதாக திறக்கப்பட்டது. இதில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்கும் வகையில் இரண்டு குப்பை சேகரிக்கும் கூண்டுகள் ஹாஜா நகர் ரயில் வே ஸ்டேசன் ரோட்டில் வைக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்றைய தினம் அதிரை கடற்கரை தெரு ஜும்மா பள்ளி அருகே உள்ள சேனாகுளம் கரையில் கிடந்த குப்பைகளை அகற்றிய அப்பகுதி இளைஞர்கள் தங்கள் நற்பணி மன்றம் சார்பாக 3-வது குப்பை தொட்டியை வைத்துள்ளனர்.