Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

அதிரை சுற்றுசூழல் மன்ற நிர்வாகிகள் MLA C.V.சேகருடன் நேரில் சந்திப்பு! (படங்கள் இணைப்பு)

அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் சார்பில் அதன் நிர்வாகிகள், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் அவர்களை இன்று 16.01.2018 காலை ஆலத்தூரில் அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

அப்போது சுற்றுச்சூழல் மன்றத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகளை சட்டமன்ற உறுப்பினரிடம் தலைவர் விவேகானந்தம், செயலாளர் எம்.எப்.முஹம்மது சலீம், துணை செயலாளர் மரைக்கா.கே.இத்ரீஸ் அஹமது, பொருளாளர் எம்.முத்துக்குமரன், தணிக்கையாளர் என்.ஷேக்தம்பி, தூய்மை தூதுவர்கள் செம்பாளூர் முத்துவேல், விதை.சக்திகாந்த் ஆகியோர் எடுத்துரைத்தனர்.

இதையடுத்து அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொண்டிருப்பதாகவும் மேலும் தேவையான வசதிகளை படிப்படியாக செய்து தருவதாகவும் எம்.எல்.ஏ. சி.வி.சேகர் உறுதியளித்தார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy