Adirai pirai
islam இந்தியா

BREAKING NEWS: ஹஜ் மானியம் ரத்து… மத்திய அரசு அறிவிப்பு

ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள முஸ்லிம்களுக்கு அளித்து வந்த மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தது.சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஆண்டு தோறும் ஏராளமான முஸ்லிம்கள் புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலிருந்து செல்லும் ஹஜ் பயணியருக்கு மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது. கடந்த 2017 ம் வருடம் இதற்காக 700 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது. இந்நிலையில், ஹஜ் மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிதி பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பால், இந்த வருடம் 1.75 லட்சம் பேர் மானியம் இல்லாமல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும்.