அதிரை திமுக முன்னாள் அவைத்தலைவர் வி.இராமசந்திரனின் நினைவு நாள் அனுசரிப்பு

அதிரையில் திமுக முன்னாள் அவைத்தலைவரும், தற்போதைய திமுக நகர தலைவருமான இராம.குணசேகரனின் தந்தையுமான வி.இராமசந்திரனின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி இன்று அதிரை திமுக அலுவலகத்தில் இமாசந்திரன் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திமுக நகர தலைவர் இராம.குணசேகரன், திமுக மாவட்ட சிறுபாண்மை பிரிவு அமைப்பாளர் மரைக்கா இத்ரீஸ் அஹமது, முன்னாள் வார்டு கவுன்சிலர் அன்சர் கான் மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Close