Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை ECR சாலையில் எச்சரிக்கை பலகை இல்லாததால் விபத்துகள் ஏற்படும் அபாயம்

அதிரை பிலால் நகர் அருகே ஈசிஆர் சாலையில் புதிய ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் சாலை பழுந்தடைந்து காணப்படுகிறது. அங்கு ரயில்வே பணிகள் நடைபெறுவதாக எச்சரிக்கை பலகைகள் ஏதும் அமைக்கப்படாமல் உள்ளதால், வாகனங்கள் ஒரே சிரான வேகத்தில் வந்து இந்த பழுதடைந்த சாலையில் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இங்கு எச்சரிக்கை பலகை வைத்தால் முன்கூட்டியே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்வர்.

எனவே இது குறித்து ரயில்வே நிர்வாகம் அல்லது உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.