Adirai pirai
islam தமிழகம்

தென்காசியில் மத கலவரத்தை ஏற்படுத்த இந்து முன்னணி முயற்சி

தென்காசி அருகில் VK புதூர் தாலுகா ஆனைகுளம் என்ற ஊரில் சுமார் 150முஸ்லீம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு முஸ்லீம்கள் தங்கள் இறைக்கடமையை நிறைவேற்றுவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பாக பள்ளிவாசலை நிர்மாணித்து காலம் காலமாக தொழுகை நடத்தி வருகின்றனர்.

இந்த பள்ளிவாசலுக்கு அருகில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக கபரஸ்தான் உள்ளது. பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் இந்த கபரஸ்தானை சுற்றி தங்களது இடத்துக்குள் காம்பவுண்ட் சுவர் கட்டியுள்ளனர். காலம் காலமாக முஸ்லீம்களும் சகோதரசமுதாய மக்களும் சகோதரத்துவ வாஞ்சையோடு வாழ்ந்துவருகின்ற இம்மக்களுக்கு மத்தியில் மத மோதல்களை உருவாக்கும் விதமாக இந்து முன்னணியைச்சேர்ந்த நகர செயலாளர் சத்தியநாதன் என்பவர் செயல்பட்டுவருகின்றார்.

பள்ளிவாசல் கபரஸ்தான் காம்பவுண்ட் சுவரை ஒட்டி கடந்த சிலமாதங்களுக்கு முன்பு இரவோடு இரவாக 10க்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து பிள்ளையார் கோவில்கட்ட முயற்சி மேற்கொண்டனர். உடனடியாக ஜமாத்தார்கள் #SDPI கட்சியினருக்கு தகவல் தெரிவித்து சம்மந்தப்பட்ட இடத்திற்கு நம் சகோதரர்கள் செல்லவே தாங்கள் கொண்டுவந்த மண்வெட்டி, கடப்பாரை ஆகிய பொருட்களை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர் .

( பள்ளிவாசல சுற்று சுவருக்கு அருகில் பிள்ளையார் கோவில்கட்டி வருடம் தோறும் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் சமூக பதட்டத்தை உருவாக்கி கலவரத்தை நடத்துவது அவர்களின் நோக்கம் )இந்நிலையில் உடனடியாக #SDPI கட்சியின் மாவட்ட தலைவர் திவான் ஒலி அவர்கள் தலைமையில் ஜமாத் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சமூக நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது .

ஆனாலும் இந்துமுன்னணி கும்பல்கள் தொடர்ந்து முஸ்லீம்களை மிரட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்துமுன்னணி நகர செயலாளர் சத்தியநாதன் என்பவர் கடந்த8.1.18 அன்று மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் இந்துக்களுக்கு சொந்தமான இடத்தை முஸ்லீம்கள் ஆக்கிரமித்து அடக்கஸ்தலம் கட்டியுள்ளனர் அதனை மீட்டு கோவில்கட்ட அனுமதி வழங்கவேண்டும் என்றும் , முஸ்லீம்கள் எங்களை மிரட்டுவதாகவும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் உண்மைக்கு புறம்பாக செய்தியை மனுவில் பதிவு செய்துள்ளார் .

மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகின்ற 28.1.18நெல்லை மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாபெரும் கரசேவை போராட்டம் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.இந்த தகவல் SDPI கட்சியின் நிர்வாகிகளுக்கு தெரியவர உடனடியாக கட்சியின் மாவட்ட தலைவர் திவான்ஒலி , மாவட்டபொதுச்செயலாளர் மஹபூப் அன்சாரி , மாவட்ட செயலாளர் ஷேக்ஜிந்தாமத்தார், மாவட்ட பொருளாளர் சீனா , சேனா சர்தார் , பாப்புலர் ப்ரண்ட் மாவட்ட தலைவர் திப்புசுல்தான், வழக்கறிஞர் லுக்மான் , யாசர்கான் மற்றும் நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட பள்ளிவாசல் நிர்வாகிகள், மற்றும் ஜமாத்தார்களை நேற்று19.1.18 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப்பிறகு சந்தித்து ,சம்பவ இடத்தை பார்வையிட்டு மேற்கொண்டு நாம் செய்யவேண்டிய சட்ட ரீதியான போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன் ,இது சம்மந்தமாக ஜமாஅத் நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிக்கும் sdpi கட்சி மற்றும் பாப்புலர் ப்ரண்ட் முழு ஒத்துழைப்பை வழங்கும் என ஜமாத்தார்களிடம் உறுதியளித்தனர் .

தகவல்

A.செய்யது மஹ்மூத்

மாவட்ட செய்தி தொடர்பாளர்

SDPI கட்சி நெல்லை மேற்கு மாவட்டம்