முன்மாதிரியாக திகழும் அதிரை A.J.ஜும்மா பள்ளி!

நமதூரில் மரண செய்தியை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக அனைத்து பள்ளிகளிலும் அறிவிப்பு செய்யப்படுகிறது. முன்பு பள்ளிகள் குறைவாக இருந்தாலும் பள்ளிகளுக்கு என்றே முஅத்தின் அன்றும் இருந்திருக்கிறார்கள். ஆனால் இக்காலகட்டத்தில் அதிரையின் பரப்பளவு பெருகி பள்ளிகளும் அதிகமானதால் மரணச் செய்தி அறிவிப்பு செய்யப் போகும் போது சில பள்ளிகளில் முஅத்தின் இல்லாமல் போவதால் அறிவிப்பு செய்யமுடியாமல் திரும்ப செல்லக் கூடிய சூழ்நிலை ஏற்ப்படுகிறது.

சில பள்ளிகளில் முஅத்தின் இல்லை என்றாலும் வெளியில் மைக் இருப்பதால் சுவிச்சியை போட்டு அறிவிப்பு செய்து விடுகிறோம். அதன் அடிப்படையில் ஏ.ஜெ.ஜும்மா பள்ளியில் அழகாக அறிவிப்பு செய்யுமிடம் என்று மைக்குக்கு அருகில் அறிவிப்பு பலகை ஓட்டி இருக்கிறார்கள். இது போன்று அனைத்து பள்ளிகளிலும் அமைத்தால் அறிவிப்பு செய்ய வருபர்களுக்கு வசதியாக இருக்கும்.

தகவல்: அபூபக்கர் LMS

Close