அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்களுக்கான கூட்டம் (படங்கள் இணைப்பு)

அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் கல்லூரி கடந்த 64 ஆண்டுகளாக ஏழை, நடுத்தர மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கி வருகிறது. தமிழகத்தின் பழம் பெருமை வாய்ந்த கல்லூரிகளில் ஒன்றான இதில் படித்த மாணவர்கள், தற்போது பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக விளங்கி வருகின்றனர். அந்த வகையில், காதிர் முகைதீன் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் கல்லூரி முதல்வர் முஹம்மது முகைதீன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் கல்லூரி செயலர் அபுல் ஹசன் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய காதிர் முஹைதீன் கல்லூரியில் படித்த 500 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Close