அதிரையில் ஏழைகளுக்கு ஆடைகளை சேகரிக்கும் தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தினர்

அதிரை கடற்கரைத்தெரு இளைஞர்கள் நடத்தி வரும் தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தினர் தொடர்ந்து சமுதாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இருப்பவர்களிடம் ஆடைகளை பெற்று இல்லாதவர்களுக்கு வழங்கும் உன்னத முயற்சியை அவர்கள் தொடங்கியுள்ளனர். கடற்கரை தெரு ஜும்மா பள்ளியில் பேனர் ஒன்றையும் அதன் அருகில், வாலி ஒன்றையும் வைத்துள்ள அவர்கள் அதில் ஆடைகளை போடுமாறு கேட்டுகொண்டுள்ளனர். இது வரை கிடைத்த ஆடைகளை இல்லாதவர்களுக்கு அவர்கள் பங்கிட்டு கொடுத்துள்ளனர்.

அதிரை கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தினரின் இந்த முயற்சிக்கு அதிரை பிறை சார்பில் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Close