Adiraipirai.in
islam உள்ளூர் செய்திகள்

மாநில அளவிலான கிராஅத் தேர்வு – அதிரை ஹாஃபிழ்கள் வெற்றி..!

சென்னை மண்ணடியில் உள்ள அஸ்ரப் பள்ளியில் மக்தப் கமிட்டி சார்பாக 20/01/2018, 21/01/2018 ஆகிய இரண்டு நாட்கள் மாநில அளவில் குர்ஆன் கிராத் மற்றும் தஜ்வீத் (குர்ஆனை அழுத்தம் திருத்தமாக இனிமையாக ஓதும்) தேர்வு ஹாஃபிழ்களுக்கு (குர்ஆன் மனனம் செய்தவார்களுக்கு) நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இயங்கும் பல்வேறு மதரஸாக்களிருந்து மொத்தம் 400 மாணவர்கள் பங்கேற்று 33 பேர் தேர்வாகினர். இவர்களில் அதிரையை சேர்ந்த கீழ்காணும் இருவர் தேர்வாகியுள்ளனர்.

M.I.துஃபைல் அஹமது (21)

S/o முஹம்மது இக்பால்.

புதுமனைத் தெரு.

M.S.,அப்துல் ஃபத்தாஹ் (19)

S/o முஹம்மது சாலிகு

சி.எம்.பி.லைன்.

இவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. அதிரைக்கு மாநில அளவில் நற்பெயரை பெற்று தந்த இவ்விருவருக்கும் அதிரை பிறையின் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.