அதிரையில் தொடர்ந்து வீணாகி வரும் தண்ணீர்!

அதிரை ஈசிஆர் சாலை பிஸ்மி மெடிக்கல்ஸ் பகுதியில் பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள பேரூராட்சியின் தண்ணீர் குழாய் கடந்த பல நாட்களாக பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் தண்ணீர் விணாக சாலையோரங்களில் ஓடி வருகிறது. இந்த தண்ணீர் அப்பகுதியின் தேங்குவதன் காரணமாக டெங்கு உள்ளிட்ட நோய்கள் வருவதற்குறிய வாய்ப்புகள் உள்ளன.

கடந்த ஆண்டு அதிரை உட்பட தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தண்ணீருக்காக அவதிப்பட்ட நிலையில் அதிரை பேரூராட்சியின் இந்த அலெட்சியப்போக்கால் தண்ணீர் வீணாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Close