Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

சேதுபாவாசத்திர காவல் நிலையத்தில் தமுமுக வினர் புகார்!

சேதுபாவாசத்திரம் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கிழக்கு கடற்கரை சாலை மாவட்ட பகுதியான திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமனாதபுரம், ஆகிய மாவட்டங்கள் ஒருங்கிணைந்த தமுமுக மாவட்ட மசூரா நேற்று (23.01.2018) மாலை மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

சேதுபாவாசத்திரத்தில் இஸ்லாமியர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க கூடாது எனவும், இஸ்லாமியர்களின் கடைகளில் பொருட்கள் வாங்க கூடாது என பிற மத மக்களை எச்சரிக்கும் மத வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமுமுகவினர் சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் வாழும் இஸ்லாமியர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டியும் புகார் அளிக்கபட்டது. இதனை காவல் துறை கண்டு கொள்ளாதபட்சத்தில் தமிழகமெங்கும் மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.