அதிரை கடற்பகுதிக்குள் நுழைந்து படகுகளை கடத்திய காரைக்கால் மீனவர்கள்… மீட்டுத்தர கோரிக்கை

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் மாநில செயலாளர் ஏ.தாஜுத்தீன் தலைமையில் நடைபெற்றது. இதில் கடந்த ஜனவர் 8 ஆம் தேதி அதிரை கடற்பகுதியில் மீன்பிடித்துகொண்டிருந்த 4 விசைப்படகுகளை காரைக்கால் மீனவர்கள் கடத்தி சென்றதாகவும், அவர்களிடம் இருந்து படகுகளை அதிகாரிகள் மீட்டுத்தர வேண்டும் என்று தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது. இதனால் 4 விசைப்படகு மீனவர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்குவதுடன் கடத்தலில் ஈடுபட்ட காரைக்காலை சேர்ந்த பரமசிவம் மற்றும் அவரது ஆட்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த தீர்மானங்களை அரசு நிறைவேற்றாவிட்டால் வரும் 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் 29 ஆம் தேதி மல்லிப்பட்டினம் ஈசிஆர் சாலையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்துவது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வடுகநாதன், மல்லிப்பட்டினம் சங்க தலைவர் காசிநாதன், செயலாளர் மணிகண்டன், கள்ளிவயல்தோட்ட சங்க செயலாளர் அஹமது சாபிக், பொருளாளர் இபுராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Close