அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி மாணவர்கள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து போராட்டம்! (படங்கள் இணைப்பு)

தமிழக அரசு கடந்த சனிக்கிழமை முதல் பேருந்து கட்டண உயர்வை அமல்படுத்தியௌது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி மாணவர்கள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து ECR சாலையில் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்தையும் மாணவர்கள் சிறைபிடித்து அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதன் பின்னர் அங்கு வந்த போலீசார் மாணவர்களை சமாதானம் செய்தி போராட்டத்தை கலைய செய்தனர்.

மாணவர்களின் போராட்டம் காரணமாக ஈசிஆர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Close