அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் கடற்கரைத்தெரு இளைஞர்கள் கோரிக்கை..!

அதிரை கடற்கரைத்தெருவில் கடந்த பல மாதங்களாக சாக்கடை பிரச்சனை இருந்து வருகிறது. தெருவின் நுழைவு வாயிலாக கருதப்படும் இப்பகுதியில் தொடரும் இப்பிரச்சனை காரணமாக அவ்வழியாக பெண்கள் மதர்ஷா செல்லும் மாணவிகளும், தொழுகையாளிகளும், பள்ளி குழந்தைகளும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனை அடுத்து யாரையும் எதிர்பார்காமல் அப்பகுதி மக்களிடம் நிதி வசூல் செய்து சுகாதார பணிகளை முஹல்லாவாசிகள் செய்து வருகின்றனர். இது தொடர்பாக நமது அதிரை பிறையில் தொடர்ந்து பல பதிவுகளை வெளியிட்டு வருகிறோம்.. ஆனால் இதற்கு பேரூராட்சி தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அதிரை கடற்கரை தெரு முஹல்லா வாசிகள், அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த மாதம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பொதுமக்கள் நாளுக்கு நாள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து மீண்டும் கடற்கரைத்தெரு இளைஞர்கள் பேரூராட்சி அலுவலகம் சென்று மனு அளித்துள்ளனர்.

Close