அதிரை ஹாலிக் மரைக்காவின் தொடர் கோரிக்கை எதிரொலி… 2 புதிய மின் கம்பங்கள் மாற்றம்

அதிரை ஆலடித்தெரு பகுதியில் கடந்த பல மாதங்களாக மின் கம்பங்கள் பழுதடைந்த நிலையில் இருந்து வந்தன. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் அதிரை “சைலண்ட் சமூக சேவகர்” ஹாலிக் மரைக்கா அவர்கள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மின் வாரியத்திடம் புதிய மின் கம்பங்கள் அமைக்க கோரி மனு அளித்து வந்தார். அதன் எதிரொலியாக இன்று அப்பகுதியில் புதிய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசியல் வாதிகளும், பேரூராட்சி அதிகாரிகளும் கூட செய்யாத பல்வேறு சேவைகளை தனியொரு மனிதராக செய்து வருகிறார் ஹாலிக் மரைக்கா. அவர்களின் சேவை மேன்மேலும் தொடர அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

Close