Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரையில் நடைபெறும் “அதிரை அஹ்மத்” எழுதிய நபி(ஸல்) வரலாறு புத்தக வெளியீட்டு விழா!

அதிரையை சேர்ந்தவர் பன்னூல் ஆசிரியர் தமிழ்மாமணி அதிரை அஹ்மத். பலதரப்பட தலைப்புகளின் கீழ் பல்வேறு வகையான அருமையான புத்தகங்களை எழுதியுள்ளார். அந்த வகையில் கடந்த 16 ஆண்டுகளாக இவர் ஆய்வு செய்து எழுதிய முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்று புத்தகத்தின் வெளியீட்டு விழா கடந்த ஜனவர் 6 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ரிப்போர்டர்ஸ் கில்ட்டு பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில் அதிரையில் இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா ஏ.ஜே.பள்ளியில் வரும் 27-1-2018 காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் PFI மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயில், SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாகவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர். இதில் அதிரையர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy