அதிரை இமாம் ஷாபி பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்ட குடியரசு தினம் (படங்கள் இணைப்பு)

நாடு முழுவதும் இன்று 69 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று அதிரை இமாம் ஷாபி பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. காலையிலேயே பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்சாகத்துடன் வளாகத்தில் ஒன்றுகூடினர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஓ.கே.எம்.சிபகத்துல்லாஹ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியை பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவர் அஹமது ஜுபைர் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் மீனாகுமாரி கொடியேற்றி சிறப்பித்தார். இதையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் OKM.சிபத்துல்லாஹ், சுற்றுசூழல் மன்ற தலைவர் விவேகானந்தம், பெற்றோர் ஆசிரியர் கழக இணை செயலாளர் முஹம்மது சலீம், பள்ளி முதல்வர் மீனா குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். இறுதியாக 7 ஆம் வகுப்பு மாணவர் அஹமது முல்தஜிம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

Close