அதிரை கடற்கரைத்தெருவில் புதுப்பொழிவுடன் திறக்கப்பட்ட தீனுல் இஸ்லாம் இளைஞர் மன்றம் (படங்கள் இணைப்பு)

கடந்த வெள்ளிக்கிழமை அதிரை கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளியில் தீனும் இஸ்லாம் இளைஞர் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. அப்போது குடியரசு தினத்தன்று சங்க கட்டிடத்தை புதுப்பித்து மீண்டும் திறப்பது என முடிவெடுக்கப்பட்டது. அந்த வகையில் இன்று அதிரை குடியரசு தின விழாவுக்கு பிறகு சங்க கட்டிடத்தை ஹாஜி.SMA.அக்பர் ஹாஜியார் அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கடற்கரை தெரு ஜமாத் தலைவர் அஹமது அலி, சாஹுல் ஹமீது(சாவண்ணா), பேரூராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர் அன்பரசன் மற்றும் ஜமாத்தார்கள், மன்ற தலைவர் அப்துல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலநது கொண்டனர். அதை தொடர்ந்து அதிரை கடற்கரைத்தெரு பகுதியின் 3 இடங்களில் இரும்பு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டன.

Close