Adiraipirai.in
உள்ளூர் செய்திகள்

அதிரை பிறை செய்தி எதிரொலி… ஈசிஆர் சாலை தற்காலிகமாக சீரமைப்பு

அதிரை பிலால் நகர் அருகே ஈசிஆர் சாலையில் புதிய ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் சாலை பழுந்தடைந்து காணப்பட்டது. அங்கு ரயில்வே பணிகள் நடைபெறுவதாக எச்சரிக்கை பலகைகள் ஏதும் அமைக்கப்படாமல் உள்ளதால், வாகனங்கள் ஒரே சிரான வேகத்தில் வந்து இந்த பழுதடைந்த சாலையில் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டது. இது குறித்து கோரிக்கை பதிவை நமது தளத்தில் கடந்த வாரம் வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், தற்போது கப்பி மணலை வைத்து சாலை சமன் செய்யப்பட்டுள்ளது.