அதிரை முஸ்லிம் லீக் நடத்திவரும் மருத்துவ முகாம்… பலர் பயனடைந்தனர் (படங்கள் இணைப்பு)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தன்வந்திரி ஆயுர்வேத வைத்திய சாலை இணைந்து நடத்தும், இலவச மருத்துவ முகாம், அதிரை நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று காலை 9:30 மணியளவில் நகர தலைவர் ஹாஜா நஜ்முதீன் தலைமையில் தொடங்கியது. நகர பொருளாளர் அப்துல் காதர் முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமை மாநில துணைத்தலைவர் SSB.நசுருத்தீன் தொடங்கி வைத்தார்.

இதில் பக்கவாதம், வயிறு பிரச்சனை, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், குழந்தையின்மை, தலைவலி நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மாலை 4:30 மணியளவில் நிறைவடையும் இந்த மருத்துவ முகாமில் பலர் கலந்துகொண்டு பயனடைந்து வருகின்றனர்.

Close