அதிரையின் முக்கிய பகுதிகளில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம்..!

தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோசொட்டுமருந்து வழங்கும் முகாம் நடைப்பெற்றது. இதில் தமிழகமெங்கும் 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து அளிக்கபட்டள்ளது. அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகளிலும் போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது.

2ம் கட்ட போலியோ சொட்டு மருந்து மார்ச் 11ம் தேதி வழங்கப்படுகிறது. அதிரையில் ரோட்டரி சங்கம் சார்பில் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

Close