Adirai pirai
உள்ளூர் செய்திகள்

மதுக்கூர் மவுலானா தோப்பு பகுதியில் 10 வீடுகளில் தீ விபத்து… MP, MLA, மாவட்ட ஆட்சியர் நேரில் உதவி!

இன்று 28/1/2017 பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மதுக்கூர் மவுளான தோப்பு குடியிருப்பு பகுதியில் இன்று காலை 10 வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் CV சேகர், மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குவதற்கு இடமும் அவர்கள் உடுத்த உடை, அரசி, போன்ற அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வழங்கினார்கள். அத்துடன் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ருபாய் 5000, MLA ருபாய் 5000, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமன் அவர்கள் ருபாய் 2000 மதுக்கூர் ஒன்றிய கழகச் செயலாளர் துரை செந்தில் ரூ. 2000 வழங்கி உதவினார்கள் வீடுகளை இழந்தவர்களுக்கு அறுதல் கூறி உடனடியாக அவர்களுக்கு வீடுகள் கட்டி தர ஏற்படும் செய்து வைத்தார்கள்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy