அக்குப்பஞ்சர் மருத்துவர் பட்டம் பெற்ற அதிரை இளைஞர் யூனுஸ்

அதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் ஹாஃபிழ் முஹம்மது இல்யாஸ். இவரது மகன் யூனுஸ் (வயது 22). அக்குப்பஞ்சர் மருத்துவருக்கான டிப்ளமோ பட்டத்தை நிறைவு செய்த இவர், தற்போது ATAMA (All Tamilnadu Acupuncture and Alternative Medical Association) கருத்தரங்கில் அக்குப்பஞ்சர் மருத்துவத்திற்கான M.D (Acu) பட்டத்தை பெற்றுள்ளார். இவர் 12 ஆம் வகுப்பில் அரபி பாடத்தில் மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்த மாணவராவார். இது குறித்து நம்மிடம் தெரிவித்த யூனுஸ், தற்போது சென்னையில் கிளினிக் தொடங்குவதற்கு முயற்சித்து வருவதாகவும், அத்துடன் சென்னை புதுக்கல்லூரியில் M.A.அரபிக் பிரிவில் படித்து வருவதாகவும் கூறினார்.

இவரது எதிர்காலம் சிறக்க அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

Close