குவைத்தில் பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு… தூதரகத்தில் திரண்ட இந்தியர்கள்

குவைத் பிரதமரும் மற்றும் உள்துறை மந்திரியுமான ஷேக் கலீத் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் வரும் ஜனவரி 29,2018 முதல் வரும் பிப்ரவரி 22,2018 வரையில் 25 நாட்கள் பொதுமன்னிப்பு நடைமுறையில் இருக்கும் என்று அறிவித்துள்ளார்.

இந்த நாட்களில் குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் கட்ட வேண்டிய பிழைகள் எதுவும் செலுத்தாமல் தாயகம் செல்லலாம் என்று அறிவித்து உத்தரவும் வெளியிட்டுள்ளார்.

இதில் முக்கியமானவை:

1) வீட்டை விட்டு ஓடிய வழக்கு இருந்தால் எளிதாக போக முடியும்.

2) திருட்டு மற்றும் பண வழக்குகளில் சிக்கி இருப்பவர்கள் வழக்கு முடிந்த பின் தான் செல்ல முடியும்.

3) கம்பெனிக்கு எதிராக வழக்கு தொடந்து விசா இல்லாமல் இருப்பவர்கள் (தொழிலாளியின் பெயரில் வழக்கு இருந்தால் விசா மாற்ற முடியாது) அபராதம் அடைத்து விசா மாற்ற முடியும்.

குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக குறைந்தது 1-லட்சத்து 25000-க்கும் அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சனைகளால் வாடி வருகிறார்கள். இதையடுத்து இந்த பொதுமன்னிப்பு அறிவிப்பு மூலம் பல ஆயிரக்கணக்கான பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை.

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தூதரகத்தில் குவிந்து வருகின்றனர்.

Close