அதிரை அருகே பஸ் கட்டண உயர்வை கண்டித்து அண்ணா பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு பேருந்து கட்டணங்களை கடந்த 20ம் தேதி திடீரென்று உயர்த்தியது. இந்த அதிக கட்டண உயர்வால் பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனைக் கண்டித்து கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை,மதுரை, வேலூர், நெல்லை ஆகிய இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு உள்ளது. நேற்று சென்னை அயனாவரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிரையை அடுத்துள்ள ராஜாமடத்தில் அமைந்துள்ள அண்ணா பல்கலைகழக மாணவர்கள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Close