சவூதியில் வேலை தேடி செல்வோருக்கான எச்சரிக்கை பதிவு..!

சவுதியில் வேலைவாய்ப்புக்களை சவுதிமயப்படுத்தும் நோக்கில் 12 வகையான தனியார் தொழில் நிறுவனங்களில் வெளிநாட்டினர் பணியாற்ற எதிர்வரும் 2018 செப்டம்பர் முதல் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தனியார் தொழில் நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுடன் தொடர்புடைய சேல்ஸ்மேன்கள் அனைவரும் கட்டாயம் சவுதியர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கலீல் அபால்கெய்லின் கூற்றுப்படி, பின்வரும் பிரிவுகள் சவுதியினர் மட்டுமே நியமிக்கப்படுவார்கள்:

1. Watches(கடிகாரங்கள் விற்பனை கடை)

2. Eye-wear ( கண் கண்ணாடிகள் சம்மந்தப்பட்ட )

3. Medical equipment and devices(மருத்துவ உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் விற்பனை கடைகளில்)

4. Electrical and electronic appliances( மின் மற்றும் மின்னணு உபகரணங்கள் விற்பனை கடைகளில்)

5. Auto parts( வாகன பாகங்கள் விற்பனை கடைகளில்)

6. Building materials( கட்டுமான விற்பனை கடைகளில்)

7. Carpets( தரை விரிப்புகள் சம்மந்தப்பட்ட கடைகளில்)

8. Cars and motorcycles( கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் விற்பனை கடைகளில்)

9. Home and office furniture( வீடு மற்றும் அலுவலர்கள் பொருட்கள் விற்பனை கடைகளில்)

10. Children’s clothing and men’s accessories( குழந்தைகள் மற்றும் ஆண்கள் பயன்படுத்தும் பொருட்கள் விற்பனை கடைகளில்)

11. Home kitchenware( வீட்டு சமையலறை பொருட்கள் விற்பனை கடைகளில்)

12. Confectioneries( திண் பண்டங்கள் விற்பனை கடைகளில்)

சவுதியில் குறைந்தது 9 மில்லியன் வெளிநாட்டினர் பணியாற்றி வரும் நிலையில் விஷன் 2030 என்ற மாற்றுப் பொருளாதார திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புக்களில் சவுதிமயப்படுத்தும் நடைமுறைகள் இன்னும் விரைவுபடுத்தப்படும்.

அதனடிப்படையில் இன்னும் 3 ஆண்டுகளுக்குள் அரசு மற்றும் அமைச்கங்களில் பணியாற்றும் வெளிநாட்டினரின் வேலை ஒப்பந்தங்கள் முழுமையாக ரத்து செய்யப்படும்.

மேலும் பெரிய மால்களில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களும் வெளியேற்றப்பட்டு அந்த வேலைவாய்ப்புக்கள் சவுதியர்களுக்கு வழங்கப்படும்.

தடை செய்யப்பட்ட, சவுதியர்களுக்கு மட்டும் என ஒதுக்கப்பட்ட வேலைகளில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அபராதங்கள் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Close