அதிரை திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மாணம்

அதிரை திமுக நகர உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா படிப்பகத்தில் பேரூர் கழக அவைத்தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் இன்று மாலை நடைபெற்றது. இதில், ஒன்றிய செயலாளர் இராமநாதன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், நகர தலைவர் இராம.குணசேகரன், முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சபிர், மீனவர் அணி அமைப்பாளர் நாகராஜன், ஒன்றிய சிறுபாண்மை அமைப்பாளர் மரைக்கா இத்ரீஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மதுக்கூர் முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் கண்ணையன், டைலர் சாமிநாதன், பொசுங்கை அபூபக்கர், கீழத்தெரு ஜமாலுத்தீன், 5 வது வார்டு உறுப்பினர் பாஞ்சாலனின் தாயார் வள்ளியம்மை, 15 வது வார்டு செயலாளர் அப்துல் அஜீஸ் அவர்களின் சகோதரி, தரகர தெரு பாரூக் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதில் கீழ்காணும் தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன:

1.வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல்

2.மார்ச் 01 ஆம் தேதி செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடுவது.

3.பல முறை கோரிக்கை வைத்தும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யாத தமிழக அரசுக்கு கண்டனம்

4. பிப்ரவரி 3 ஆம் தேதி வரும் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு இரங்கல் தெரிவிக்க தீர்மாணம்.

Close