அதிரை வானில் ஒளிர்ந்த செந்நிற சந்திரன்… பள்ளிவாசல்களில் நடைபெற்ற கிரகண தொழுகை (படங்கள் இணைப்பு)

150 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அபூர்வ சந்திர கிரகணம் தொடங்கியது. மாலை 5.18க்கு தொடங்கிய சந்திரகிரகணம் கீழ்வானத்தில் நிலா தோன்றும்போதே, முழு சந்திர கிரகணம் பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இரவு 7.25 மணிவரை முழு சந்திர கிரகணம் நீடிக்கும். அதன்பிறகு, பூமியின் நிழல் படிப்படியாக மறைந்து, நிலா இயல்புநிலையை அடையும். இரவு 8.41 மணி வரை நிகழும் கிரகணத்தை வெறும் கண்களால் காணலாம். நிலா சிவப்பு நிறமாக மாறும் அரிய சந்திர கிரகணம் 150 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையொட்டி இன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு பிறகு சந்திர மரைக்காயர் பள்ளிவாசல், கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளி, முகைதீன் ஜும்ஆ பள்ளி, புதுப்பள்ளி, மஸ்ஜித் தவ்பா (TNTJ) பள்ளிகளில் கிரகணத்தொழுகை நடைபெற்றது.

Close