அதிரையில், அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்த திமுக வினர்!

இன்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திமுக வின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அதிரை திமுகவினர் சார்பில் அண்ணா படிப்பகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் இராமநாதன், பேருர் கழக அவைத்தலைவர் சாகுல் ஹமீது, பேரூர் கழக செயலாளர் இராம.குணசேகரன், மாவட்ட பிரதிநிதி பிரகாஷ், மாறன், ரமேஷ், ஒன்றிய துணை செயலாளர் முருகன், பிச்சை. ரவி, இளங்கோ, மற்றும் ஒன்றிய சிறுபாண்மை பிரிவு அமைப்பாளர் மரைக்கா இத்ரிஸ், பேரூர் கழக துணை செயலாளர் அன்சர் கான், முத்துராமன், முல்லை, பசுல்கான், செய்யயு அஹமது, சரீப், வருசை முஹம்மது, நூர் முஹம்மது, மற்றும் திமுக உறுப்பினர்கள் பலர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Close