Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரைக்கு 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு நிலையம் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் மனு

இன்று 05-02-2018 திங்கள் கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்தியன் ரெட் கிராஸ் அதிராம்பட்டினம் துனை கிளை சேர்மன் மரைக்கா இத்ரீஸ் தலைமையில் ரெட் கிராஸ் ஆயுட்கால உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தீயணைப்பு நிலையம் மற்றும் 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமாக நிறைவேற்றிய தீர்மானத்தின் நகல் வழங்கப்பட்டது. கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் விரைவில் ஆம்புலன்ஸ் மற்றும் தீ அணைப்பு நிலையம் அமைத்து தர அனைத்து உதவியும் செய்வதாக நமது குழுவினரிடம் இன்முகத்துடன் உறுதி அளித்து மனுவை ஏற்றுக்கொண்டார்கள்.