Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் கேன்சரால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி குறித்து பரவும் தகவல் – தந்தையின் வேண்டுகோள்!

அதிரையில் ஆட்டோ ஓட்டுனர் முஹம்மது அவர்களின் மகள் நதீரா என்ற 8 வயது சிறுமி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சென்னை எக்மோரில் உள்ள ICH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு சுமார் 8 லட்சம் ரூபாய் செலவாகும் என்பதால் அனைவரும் உதவுமாறு முஹம்மது அவர்களின் எண்ணுடன் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் தகவல் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து முஹம்மது அவர்கள் நம்மிடம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதில் தனது மகள் அனுமதிக்கப்பட்டுள்ளது அரசு மருத்துவமனை என்றும், சிகிச்சைக்காக இவ்வளவு தொகை செலவாகாது என்றும், இதர செலவுகளுக்கு மட்டுமே பணம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். சில நல்ல உள்ளம் கொண்ட சகோதரர்கள் தன் மீதுள்ள பாசத்தால் இவ்வாறு பகிர்ந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து அழைப்புகள் வருவதால் தன்னால் மற்ற பணிகளை கவனிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். எனவே நல்லுள்ளம் கொண்ட சகோதரர்கள், துஆ செய்யுமாறும், இனி இந்த பதிவை பகிர வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.