அதிரையில் திருடர்களின் அச்சுறுத்தல் அதிகரிப்பு!

அதிரையில் நாளுக்கு நாள் திருடர்களிம் அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றது. நேற்று 05.02.2018 (திங்கள் கிழமை) இஷா தொழுகை நேரத்தில் ஹனீப் பள்ளி அருகே ஒரு வீட்டில் திருடன் ஏறி குதித்துள்ளான். விஷயம் அறிந்த பகுதி மக்கள் தேடுதலில் ஈடுபட்டு இறுதியில் திருடனை பிடிக்க இயலவில்லை.

நேரம் கடந்து தெருக்களுக்குள் சுற்றும் அறிமுகமில்லாத நபர்களை கண்டால் நிச்சயம் அவர்கள் சம்பந்தமாக விசாரிப்பது அவசியமாக இருக்கிறது.

நமதூரில் பெரும்பாலான வீடுகள் பூட்டி இருப்பதை திருடர்கள் நோட்டமிட அதிக வாய்ப்புகள் உள்ளது. நமது பகுதிகளை பாதுகாக்க விழிப்போடு இருப்பது அவசியமாகும்.

Close