சென்னையில் சிறந்த இரத்ததான சேவைக்கான விருது பெற்ற அதிரை இளைஞர் சமீர்..!

சென்னையில் சென்ற (04/02/2018) கிரசென்ட பிளட் டோனோர்ஸ் அமைப்பு சார்பில் LIFE SAVER MEET 2K18 என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியில் கிரசென்ட பல்கலைக்கழகத்தில் காலை 9மணிமுதல் மாலை 5மணிவரை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்து அவர்களின் சேவைகளை பாராட்டும் விதவித்தில் விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட கிரசென்ட பிளட் டோனோர் அமைப்பின் சேவையை பாராட்டி விருதுகள் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தஞ்சை CBD அமைப்பு இரண்டாவது ஆண்டாக சிறந்த தன்னார்வளர்களுக்கான விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனை தஞ்சை மாவட்ட செயலாளர் காலித் அகமது அவர்களின் முன்னிலையில் உறுப்பினர்களான சமீர் அலி,முஸ்தபா, யூசுப், நூர் முகமது,இஜாஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து, தஞ்சை கிரசெண்ட் பிளட் டோனோர்ஸ் அமைப்பின் உறுப்பினரான அதிரை சமீர் அவர்கள் சமூக சேவையில் சிறந்த விளங்கியதால், சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது.

Close