அதிரையில் இயற்கை குடிநீர் இருக்க, செயற்கை ரசாயன நீர் எதற்க்கு.!

அதிரை மக்களுக்கு அரசால் சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நாகரீகம் என்ற பெயரிலும் தரமானது எனக்கூறியும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை (RO / Filter Water) அதிகம் பயன்படுத்த துவங்கி வருகின்றோம்.

குடங்கள் இருந்த வீடுகளில் RO Filter இயந்திரங்கள் பொருத்தப்பட்டும், கேன் குடிநீரும் இருக்கின்றன. இதனால் ஏற்படும் தீங்குகளை நாம் எண்ணிப்பார்ப்பது கிடையாது.

சாதாரண குடிநீருக்கும் RO தண்ணீருக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன.

RO நீரால் ஒரு சில நன்மைகள் இருப்பதாக கூறப்பட்டாலும் பல தீங்குகள் இருக்கத்தான் செய்கிறது. சுத்தீகரிப்பு என்ற பெயரில் நீரில் இருக்கும் கால்ஷியம், மெக்னிஷியம் போன்ற சத்துக்களை வெளியேற்றுகின்றது. அதுமட்டுமன்றி பாக்டீரியா & வைரஸை அழிப்பதில்லை இந்த சுத்தீகரிப்பு முறை.

இயற்கை குடிநீர் இருக்கும் நிலையில் தண்ணீரில் ரசாயனம் கலந்து குடிக்க அவசியம் ஏன்? பல உணவு வழக்கங்களால் போதிய சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்காத நிலையில் தண்ணீரும் நமக்கு எதிராக இருப்பது வேதனை.

இயற்கை குடிநீரை பயன்படுத்து நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வோம் இறைவன் அருளால்.

இயற்கையான குடிநீர் கிடைக்கும் நமதூரில் ரசாயன குடிநீர் அவசியமா?

அதிரை சாலிஹ்

Close