இனி விரைவில் இணையதளங்களில் பத்திரப்பதிவு செய்யலாம்..!

தமிழக பத்திரப் பதிவுத் துறையில் இணையவழிப் பதிவு விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று தமிழக பத்திரப் பதிவுத் துறையின் கூடுதல் ஐஜி அங்கையற்கண்ணி தெரிவித்துள்ளார். .தமிழக பத்திரப் பதிவுத் துறையில் நிலத்திற்கான பழைய பதிவு முறைகளை மூட்டை கட்டிவிட்டு கணினி தொழில்நுட்பத்தின் மூலம் இணையவழிப் பதிவுத் திட்டத்தில் விரைவான பதிவை மேற்கொள்ளும் விதமாக புதிய சேவை தொடங்க இருக்கிறது.

தற்போது இருக்கும் பழைய பத்திரப் பதிவுகளில் குறைகளை நிவர்த்தி செய்யவும், இணையவழிப் பதிவு நிர்வாகத்தை மேற்கொள்ளவும், பதிவுத் துறை அலுவலகங்களில் ஸ்டார் 2.0 என்ற புதிய மென்பொருள் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. அதனை செயல்படுத்த கடந்த அக்டோபர் – நவம்பர் மாதங்கள் தொடங்கி மாநிலம் முழுவதும் முன்னோட்டங்களும், பயிற்சியும் வழங்கப்பட்டு வருகின்றன.

இனி பதிவுத் துறைக்கு வருவோர் இணையம் மூலமாக விண்ணப்பித்தால் போதுமானது. இதற்காக, அனைத்து இனங்களும் வரையறுத்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், நில மதிப்பு, இட அமைவு உள்ளிட்ட பதிவுத் துறை, வருவாய்த் துறை தொடர்பான நில ஆவண தகவல்களும் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளதால் எளிதாக, விரைவில் பதிவுப் பணிகள் நடைபெறும்.

Close