தஞ்சையில் காவலர் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகள் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலர் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பிப். 17-ம் தேதி தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது: இரண்டாம் நிலைக் காவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை-ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்), இரண்டாம் நிலை சிறைக் காவலர் (ஆண் மற்றும் பெண்), தீயணைப்போர் (ஆண்) பதவிகள் உள்பட 6,140 காவலர் காலிப் பணியிடங்களுக்கான தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு தொடர்பாகத் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் குழுமத்தின் அறிவிக்கைப் பெறப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பிப். 17-ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் இணையதளத்தில் விண்ணப்பித்த நகலுடன் பிப். 17-ம் தேதி முதல் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

Close