இஜ்திமா களப்பணியில் கலக்கும் அதிரையர்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று முதல் பிப்ரவரி 09, 10 ஆகிய இரு தினங்களில் தஞ்சாவூர் மட்டும் திருவாரூர் மாவட்ட இஸ்திமா பெரிய ஜூம்ஆ பள்ளி அருகே உள்ள காட்டுப்பள்ளிவாசல் மைதானத்தில் தொடங்கியுள்ளது.இதையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து பேருந்துகளிலும் சொந்த வாகனங்களிலும் ஏராளமான மக்கள் இஜ்திமாவுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், அதிரையை சேர்ந்த தன்னார்வலர்கள் தொடர்ந்து இஜ்திமாவுக்கு வருகை தந்துள்ளவர்களுக்கு உதவி வருகின்றனர். இதற்காக அனைத்து முஹல்லாக்களை சேர்ந்த உறுப்பினர்கள், சமுதாய இயக்கங்கள் இஜ்திமா தொடங்குவதற்கு முன்பாகவே ஆலோசனைக்கூட்டங்களை நடத்தி முன்னேற்பாடுகளை செய்திருந்தனர்.

Close