அதிரையில் துஆவுடன் இனிதே நிறைவடைந்த தப்லீக் இஜ்திமா…!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று அஸர் தொழுகைக்கு பிறகு தப்லீக் இஜ்திமா தொடங்கி இன்று மஹரிப் வரை நடைபெற்றது. காட்டுப்பள்ளிவாசல் மைதானத்தில் நடைபெற்ற இந்த இஜ்திமாவில் தஞ்சை திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு ஊர்களில் இருந்து பேருந்துகளிலும் சொந்த வாகனங்களிலும் ஏராளமான மக்கள் இஜ்திமாவுக்கு வருகை தந்தனர். இதனால் இரண்டு நாட்கள் அதிராம்பட்டினம் விழா கோலம் பூண்டிருந்தது. இஜ்திமாவை ஒட்டி அனைத்து தெரு முஹல்லாவாசிகளால் எண்ணற்ற உதவிகளை செய்து வந்தனர். இந்த நிகழ்ச்சி மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு துஆவுடன் நிறைவேறியது.

Close