அதிரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மமக தலைவர் M.H.ஜவாஹிருல்லாஹ்! (படங்கள் இணைப்பு)

மமகவின் 10ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோட்டை முதல் குமரி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தமுமுக மற்றும் மமகவின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இன்று அதிரையில் கல்வெட்டுகளை திறந்து வைத்து கொடியேற்றி வைத்தார்.

அதை தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் உரை நிகழ்த்திய பின்னர் மல்லிப்பட்டினம், மந்திரிபட்டினம் ஆகிய ஊர்களை நோக்கி சுற்றுப்பயணத்தை தொடர்ந்தார்.

இதில் மமக மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது முஹம்மது, மமக மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா, நகர செயலாளர் இத்ரீஸ் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Close