Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

FLASH NEWS: மக்களின் ஆரவாரத்துடன் அதிரை வந்த டிடிவி தினகரன்!

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணம் என்ற பெயரில் முதற்கட்டமாக பிப்ரவரி 2ம் தேதி முதல் தஞ்சை, கும்பகோணம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவர், இன்று இரவு 11:45 மணிக்கு அதிரை வந்தார். நள்ளிரவு என்றும் பாராமல் ஏராளமான மக்கள் டிடிவி தினகரன் பேச்சை கேட்க பேருந்து நிலையத்தில் கூடியிருந்தனர். டிடிவி வருகையை ஒட்டி அவரது ஆதரவாளர்கள், பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.