Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரை பைத்துல்மால் சார்பில் திருக்குர்ஆன் மற்றும் மதநல்லிணக்க மாநாடு நடத்த முடிவு..!

அதிரையில் 15 வது திருக்குர்ஆன் மாநாடு நடத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் 11-02-2018 இரவு 7:30 மணியளவில் பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜகாத் வசூலுக்கு இடையூறு வராத வகையில் சிக்கனமான செலவில் திருக்குர்ஆன் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் 2 நாட்கள் திருக்குர்ஆன் மாநாடு நடத்துவது என்றும் மூன்றாவது நாள் மதநல்லிணக்க மாநாடு நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர்.