பட்டுக்கோட்டை திமுக ஒன்றிய உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிரை நிர்வாகிகள் பங்கேற்பு!

பட்டுக்கோட்டையில் திமுக மேற்கு ஒன்றிய உறுப்பினர்கள் கூட்டம், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.   இதில் அதிரை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் கீழ்காணும் 8 தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மாணங்கள்:

  1. திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 30 ஆம் தேதி வரை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடும் வகையில், அனைத்து கிளைகளிலும் கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும் மாணவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
  2. ஈரோட்டில் மார்ச் 24, 25 ஆம் தேதிகளில் திமுக மண்டல மாநாட்டிற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைகளை சேர்ந்தவர்களும் திரளாக கலந்துகொள்ள முடிவெடுக்கப்பட்டது.
  3. பிப்.21 ஆம் தேதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெறும் தஞ்சை தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் மினி நோட்டுடன் கலந்துகொள்ள தீர்மாணிக்கப்பட்டது.
  4. 2G வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா மற்றும் மாநிலங்கலவை உறுப்பினர் கனிமொழி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு ஆதரவாக இருந்த திமுக தலைவர் கருணாநிதி, செயல்தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
  5. விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்கவும், விவசாய கூலி தொழிலாளர்களுக்கு உரிய வாழ்வாதார உதவி வழங்கவும் தமிழக அரசை கேட்டுகொள்ளப்பட்டது.
  6. உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற அனைவரும் பாடுடபட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
  7. 2018 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை சரிபார்த்து அதில் உள்ள தவறுகளை களைந்து தகுதியுள்ள வாக்காளர்களை இணைக்க வாக்குச்சாவடி முகவர்கள் முனைப்புடன் செயல்பட முடிவெடுக்கப்பட்டது.
  8. கட்சியில் இளைஞர்கள் மற்றும் பெண்களை  அதிகளவில் இணைத்து இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி போன்ற அமைப்புகளை ஏற்படுத்த அனைவரும் ஒற்றுமையாக செயல்பட தீர்மாணிக்கப்பட்டது.

Close