SDPI மாவட்ட தலைவர் இலியாஸை தாக்கிய வழக்கில் 3 போலீசாரிடம் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை!

கடந்த 1-4-2013 அன்று புதுப்பட்டினத்தில் நடைபெற்ற கலவரத்தின் போது, SDPI தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை இலியாஸ் மீது அன்றை அதிரை காவல்துறை துணை ஆய்வாளராக இருந்த ராஜ்கமல், ரவிச்சந்திரன், முத்துலெட்சுமி ஆகியோர் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக இலியாஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணைகளில் ஆஜராகாததால் போலீசாருக்கு நீதிமன்றம் அபராதங்களை விதித்திருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது தஞ்சையில் உள்ள மாநில மனித உரிமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் இலியாஸ் தரப்பில் வழக்கறிஞர் இஸ்மாயிலும், போலீஸ் தரப்பில் வழக்கறிஞர் சண்முகநாதன் ஆஜராகினர். இதையடுத்து நீதிமன்றத்தில் போலீசாரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. இதையடுத்து இந்த வழக்கை ஜூன் 01 ஆம் தேதிக்கு  ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Close