அதிரையில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி!

அதிரை சுறைக்கா கொள்ளையில் வசித்து வரும் கமால் என்பவரை நேற்றிரவு (13.02.2018) அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கபட்டார்.

சுமார் 9:30 மணியளவில் வீட்டு கதவை தட்டும் சப்தம் கேட்டு கதவை திறந்தார். அப்போது அடையாளம் தெரியாத சில நபர்கள் இரும்புப்கம்பியால் தாக்கியதாக கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட இவர் அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்கபட்டதன் காரணம் அறியாத நிலையில் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்துள்ளார்கள்.

Close