Adiraipirai.in
POLITICS உள்ளூர் செய்திகள்

அதிரையில் நடைபெற்ற திமுக நகர ஆய்வுக்கூட்டம் (படங்கள் இணைப்பு)

தஞ்சை தெற்கு மாவட்ட பட்டுக்கோட்டை ஒன்றியம் சார்பில் அதிரை நகர திமுக கிளையின் ஆய்வுக்கூட்டம் இன்று மாலை 6 மணியளவில் சேது ரோட்டில் உள்ள சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட பொறுப்பாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான து.செல்வம், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் அ.பழனியப்பன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிரை நகர செயலாளர் இராம்.குணசேகரன் தலைமை தாங்கினார். இதில் பேருர் கழக அவைத்தலைவர் சாகுல் ஹமீது, பேரூர் கழக துணை செயலாளர் அன்சர் கான், முன்னாள் சேர்மன்.அஸ்லம், வார்டு செயலாலர்கள், கிளை உற்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது அவர்களிடம் உறுப்பினர்கள் சேர்க்கை, கட்சி பணிகள், வாக்குச்சாவடி முகவர் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.