அதிரையில் இந்து மக்களின் மயானத்தை குப்பை மேடாக்கும் பேரூராட்சி… சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு!

அதிரை பேரூராட்சியில் உள்ள இந்து மக்களின் பொதுமயானத்தில் கடந்த 13 ஆண்டுகளாக பேரூராட்சியால் குப்பை கொட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் இறுதிச்சடங்கு செய்யும் இடங்கள் குப்பை மேடாக மாறியுள்ளது. மேலும் அங்குள்ள பிளாஸ்டிக் கழிவுகள் தீயிட்டு கொளுத்தப்படுவதால் சுற்றுபுற மக்களுக்கு நோய் பரவும் அபாயம் எழுந்துள்ளது. பேரூராட்சியின் இந்த நடவடிக்கையை கண்டித்து அதிரை வண்டிப்பேட்டை சந்திப்பில் வரும் 20-2-18 அன்று காலை 9 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Close